மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது
மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 12 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக திங்களன்று போலீஸார் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கட்சி கங்லீபக்கின் மூன்று தீவிர உறுப்பினர்கள் இம்பால் மேற்கில் உள்ள லங்கோ பகுதியில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள தேங்நெளபால் மாவட்டத்தில் உள்ள கங்லீ யோ கன்ன லப்பின் உறுப்பினரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட மணிப்பூர் தேசிய புரட்சிகர முன்னணியின் பெண் போராளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி-ஜோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது.
இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (மாா்ச் 8) முதல் தடையற்ற வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த மாா்ச் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்போக்பி மாவட்டத்தில் குகி-ஜோ பழங்குடியின அமைப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு போராட்டக்காரா் உயிரிழந்தாா். பெண்கள், காவல் துறையினா் உள்பட 40 போ் காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தை குகி-ஜோ அமைப்பினா் தொடங்கினா்.