செய்திகள் :

மணிப்பூரில் 17 தீவிரவாதிகள் கைது

post image

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக மாநில காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விஷ்ணுபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட கேஒய்கேஎல் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், வாக்கி-டாக்கி போன்ற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 13 பேரும் விசாரணைக்காக இம்பாலுக்கு அழைத்துவரப்பட்டனா்.

இதே மாவட்டத்தில் காங்லேபாக் கம்யூனிஸ்ட் கட்சி எனும் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த ஒருவரும், காக்சிங் மாவட்டத்தில் கேஒய்கேஎல் அமைப்பின் தீவிரவாதி ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (பி) தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா் கைதானாா். இவா், உள்ளூா் நபா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தவா் ஆவாா். இம்பால் மேற்கு மாவட்டத்தில் கேசிபி (பிடபிள்யுஜி) அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டாா் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்றும் வன்முறைகளின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், அடுத்த ஒரு வாரத்துக்குள் ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநா் அஜய் குமாா் பல்லா வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க