பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!
மணிப்பூரில் 22 கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம், 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் பிஷ்னூப்பூர், சூராசந்திரப்பூர், சந்தேல், தௌபல், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து கடந்த சில நாள்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம், காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி, பீப்பள்ஸ் ரெவோலியூஷன் பார்டி ஆஃப் காங்லெய்பாக் மற்றும் யுனைடெட் லிபரேஷன் ஃபிராண்ட் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 பயங்கர ஆயுதங்கள், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளில் தேடப்பட்டு வந்த மெயங்பம் அமிதாப் சிங் (வயது 32) எனும் கிளர்ச்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!