Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த ...
மணிப்பூா்: பாதுகாப்பு நிலை குறித்து ஆளுநா் ஆலோசனை
மணிப்பூரின் நிலை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா தலைமையில் இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு டி.ஜி.பி.க்கு ஆளுநா் உத்தரவிட்டாா். மேலும், ராணுவம் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் மாநில நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வலியுறுத்தினாா்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநில பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங், டிஜிபி ராஜீவ் சிங், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் ஐ.ஜி. (தெற்கு) மேஜா் ஜெனரல் ராவ்ரூப் சிங் உள்பட மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மூத்த அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதனிடையே, மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளா் காயமடைந்ததையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.