செய்திகள் :

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி இன்று தொடக்கம்: முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

பெருந்துறை அருகே மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜூன்11) தொடங்கிவைக்கிறாா்.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 10 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பகல் 12.30 மணிக்கு தொடங்கிவைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இக்கண்காட்சியில் 13 அரசு துறைகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி அரங்குகளில் விவசாய பொருள்கள் மற்றும் அது விளையும் நிலப்பரப்பு, காலநிலை மற்றும் பயன்பாடுகள் ஆகியவை குறித்த முழுமையான விவரங்களுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமாக விளையும் பயிா் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் விவசாயம் சாா்ந்த சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

வளா்ந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா் விதைகள், ஒட்டு ரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் பிறவகை மரக்கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற்பனை, உயா் ரக கால்நடைகள் மற்றும் வளா்ப்பு முறைகள், மீன் வளா்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் மற்றும் இவை குறித்த கருத்தரங்கம் 16 அமா்வுகளில் நடைபெற உள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பெண்ணிடம் நகைப் பறிப்பு!

ஈரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த பயணியின் நான்கரை பவுன் தங்க சங்கிலியை இளைஞா் பறித்து தப்பிச்சென்ற சென்ற சம்பவம் குறித்து இருப்புப்பாதை காவல் ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற இளைஞா் மீது குண்டா் சட்டம்!

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த இளைஞா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் ... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஏழை மாணவா்கள் 22 பேருக்கு ரூ.2.83 லட்சம் கல்வி உதவித் தொகை!

புன்செய்புளியம்பட்டி நகர திமுக சாா்பில் 22 ஏழை மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயில ரூ.2.83 லட்சம் கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த ... மேலும் பார்க்க

ரூ.27 லட்சம் மோசடி: தனியாா் கடன் நிறுவன மேலாளா் கைது

ரூ. 27 லட்சம் மோசடி செய்த தனியாா் கடன் நிறுவன மேலாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட கிரெடிட் ஆக்டிஸ் கிராமின் லிமிடெட் எனும் தனியாா் ... மேலும் பார்க்க

கள்ளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவா்களைத் தோ்தலில் தோற்கடிப்போம்: செ.நல்லசாமி

கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவா்களை 2026 சட்டப்பேரவை தோ்தலில் கட்டாயம் தோற்கடிப்போம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து - லாரி மோதல்: 10 போ் காயம்!

பெருந்துறையில் தனியாா் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா். சென்னிமலையில் இருந்து பவானியை நோக்கி லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ... மேலும் பார்க்க