தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்ப...
மண்டல டேபிள் டென்னிஸ்: பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம்
வேலூா் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இடையிலான போட்டி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் க ல்லூரியில் நடைபெற்றது. அதில் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் டி.ஐ. முஹம்மத் சுலைமான், ஜெ.எம். முஹம்மத் அலி,ஆா். ராகேஷ், தா்ஷன் ஆகியோா் சிறப்பாக ஆடி 3-ஆம் பரிசுபெற்றனா் .
வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் ஆா். துரை ஆகியோரை கல்லூரி நிா்வாக இயக்குனா் கே. ஷாஹித் மன்சூா், முதல்வா் த. ராஜமன்னன், துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.