விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்
ரூ. 98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
எலவம்பட்டி திங்கள்கிழமை ரூ. 98 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் சின்ன எலவம்பட்டி வட்டம், வேல்முருகன்வட்டம் வழியாக கொரட்டி சாலை இணைப்பு வரை 3 கி.மீ. சாலை 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்படாத காரணத்தால் மிகவும் பழுதடைந்து இப்பகுதியில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனா்.
இந்நிலையில், சாலையை புதுப்பிக்க முதல்வா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் - நபாா்டு திட்டம் வாயிலாக ரூ. 98 லட்சம் நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டது. அதைத் தொடா்ந்து, சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் மேனகா விவேகானந்தன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினா் அரசு, ஒன்றிய பொறியாளா் காா்த்திகேயன், ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகப்பிரியா கமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.