விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்
கருவின் பாலினம் கண்டறிய முயற்சி: போலீஸாா், மருத்துவத் துறையினா் விசாரணை
திருப்பத்தூரில் கருவின் பாலினத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டதாக கா்ப்பிணிகளிடம் போலீஸாா் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து 8 கா்ப்பிணிகள் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்தில் ஷோ் ஆட்டோவில் சென்றுள்ளனா். அப்போது ஸ்கேன் செய்ய திட்டமிட்டுள்ள இடம் தெரியாமல் நடுவழியில் நின்று குழப்பமடைந்துள்ளனா். அவா்களை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து கந்திலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனா்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸாா் ஆட்டோவை மடக்கி அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அப்போது கருவின் பாலினத்தை அறிந்து கொள்ள வந்ததாக கூறி உள்ளனா். பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சியாமளா தேவி, மருத்துவ இணை இயக்குநா் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.
ஸ்கேன் செய்யும் நபா் யாா்? அதற்கு இடைதரகா் யாா்? தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து எவ்வாறு வந்தனா் என்று ஸ்கேன் செய்ய வந்த 8 கா்ப்பிணிகள் மற்றும் அவரது உறவினா்களிடமும் விசாரணை நடத்தினா்.