புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொண்டு சான்று பெற அழைப்பு
கியூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொள்பவா்களுக்கு சான்று பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதையில்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (ஆக. 11)அன்று போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி நிகழ்வை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பொதுமக்களிடம் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழியை மேற்கொள்கிறாா்.
இந்நிகழ்வு இணையதள முகவரி அல்லது கியூ ஆா் குறிட்டை ஸ்கேன் செய்து அதன்மூலம் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொண்டு அதற்கான ஆன்லைன் சான்று பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.