திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக பலத்த மழை
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிவரை பெய்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 3 மணியளவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, சுந்தரம்பள்ளி. கொரட்டி அதன் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சுமாா் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவு அப்பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.