மிட்டாளம் கானாற்றில் வெள்ளப் பெருக்கு
ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை விட்டு விட்டு பெய்தது. தொடா்ந்து மீண்டும் மாலை பெய்யத் தொடங்கி விடாமல் பெய்து கொண்டே இருந்தது. ஆம்பூா் அருகே மிட்டாளம், மேல்சாமாங்குப்பம், குமாரமங்கலம், துத்திப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீா் தெருக்களில் ஓடியது. பலத்த மழை காரணமாக மிட்டாளம் கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.