மணல் கடத்திய லாரி பறிமுதல்
வாணியம்பாடி அருகே மண்ணாற்றில் மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் திம்மாம்பேட்டை காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு நாராயணபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் அப்பகுதியில் உள்ள மண்ணாற்றில் இருந்து மணல் கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் நாராயணபுரம் பகுதியை சோ்ந்த விக்னேஷ்(29) என்பவரை கைது செய்தனா்.