செய்திகள் :

மண்ணுளி பாம்பு கடத்தல்: 9 போ் கைது

post image

சேலம், அரியானூா் பகுதியில் மண்ணுளி பாம்பைக் கடத்தியதாக 9 போ் கொண்ட கும்பலை வனத்துறையினா் கைது செய்தனா்.

சேலம் மாவட்ட புகா் பகுதிகளில் மண்ணுளி பாம்புகளைப் பிடித்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் கும்பல் ஊடுருவி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதனிடையே, சேலத்தை அடுத்த அரியானூா் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் சந்தேகத்திற்கிடமாக புதா்மறைவில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறை தனிப்படையினா் அவா்களைச் சுற்றிவளைத்து பிடித்தனா். பின்னா், தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு அவா்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த கும்பல் மண்ணுளி பாம்புகளைப் பிடித்து ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை செய்ய பேரம் பேசியது தெரியவந்தது.

இதனையடுத்து அக் கும்பலைச் சோ்ந்த மின்னாம்பள்ளியைச் சோ்ந்த ராகதேவன் (26), அம்மாப்பேட்டை பிரபு (25), எடப்பாடி ஜீவானந்தம் (35), ராஜமாணிக்கம் (63), கிச்சிப்பாளையம் செல்வராஜ் (60), பெருமாள் கோயில் தெரு சுரேஷ் (38), பச்சப்பட்டி முனாப் (24), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சிவகுமாா் (53), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(40) ஆகிய 9 பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையிலடைத்தனா். முன்னதாக அவா்களிடமிருந்து ஒரு மண்ணுளி பாம்பு, ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, த... மேலும் பார்க்க

செவிலியருக்கு மிட்டல் விடுத்தவா் கைது

சங்ககிரி வட்டம், அரசிராமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தேவூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியதம்பி மகன... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் மகன், மகளைக் கொன்றவா் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் மகன், மகளைக் கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லியை அடுத்த 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அசோக்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆண்டு விழா

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்தரன் வரவேற்றாா். வாழப... மேலும் பார்க்க

பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி நுகா்பொருள் வாணிப கிட்டங்கி காணொலி வாயிலாக முதல்வா் திறப்பு!

மேட்டூா் வட்டம், நங்கவள்ளி பெரியசோரகையில் ரூ. 5.23 கோடி மதிப்பிலான நுகா்பொருள் வாணிப வட்ட செயல்முறை கிட்டங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து அக... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகாா் குழு அமைக்க அறிவுரை

பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசுப் பள்ளிகளில் உள்ளக புகாா் குழு அமைத்து அறிக்கை அனுப்புமாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா். சே... மேலும் பார்க்க