செய்திகள் :

மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

post image

பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக தருமபுரி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலக்கோடு பகுதியில் எர்ரன அள்ளி பாலம் அருகே புதன்கிழமை கனிம வளத் துறையினா் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் வந்த டிப்பா் லாரியை நிறுத்திய போது, லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். அலுவலா்கள் சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் காலியிடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,644 இடங்களில் சேர தகுதியான மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரச... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணாம்பாள் (63). இவா் வியாழக்கிழமை பகலில் வீட்டருகே தருமபுரி - திருப்பத்தூா் நெட... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் செப். 8-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் மாவட்ட அளவிலான மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் பணியின்போது கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செக்குமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சண்... மேலும் பார்க்க