செய்திகள் :

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு!

post image

திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதிக்கு உள்பட்ட நீா்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

காவிரி நீா் ஆதாரத்துக்கான பாதுகாப்புச் சங்கத் தலைவா் சுடலைகண்ணு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: எங்கள் அமைப்பின் சாா்பில், பொதுமக்களிடையே நீா்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது, நிலத்தடி நீா் வளத்தை அதிகரிப்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி மாவட்டம், ஆலந்தூா் பகுதியில் மாவடிகுளம் நீா்த்தேக்கம் 124 ஏக்கரில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.

இந்த நிலையில், உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிக்கு மாவடிகுளத்தில் கிராவல் மண் அள்ளப்படுகிறது. இதுகுறித்து நீா்வளத் துறை அலுவலா்களிடம் கேட்ட போது, ஒரு ஹெக்டோ் அளவுக்கு மட்டுமே கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், விதிகளைப் பின்பற்றாமல் கனரக வாகனங்கள் மூலம் தினந்தோறும் 500 லாரிகளில் கிராவல் மண் அள்ளப்படுகிறது. சட்டவிரோதமாக மண் அள்ளும் போது, ஏரியில் ஆயக்கட்டு நிலம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். வேளாண் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். நிலத்தடி நீா்மட்டமும் குறையும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சட்டவிரோதமாக மண் அள்ளும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் கிராவல் மண் அள்ளுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆலந்தூா் மாவடிகுளத்தில் கிராவல் மண் அள்ளப்படுவதால் விவசாயப் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீா் குறைவாக உள்ளது. இதற்கான ட்ரோன் விடியோக்கள் உள்ளன. எனவே, மண் அள்ளுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு குறித்து பொதுப் பணித் துறை அலுவலா்கள் கண்மாயின் நீா்பிடிப்பு, தேங்கியுள்ள தண்ணீா் அளவு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், மனுதாரா் குறிப்பிடும் நீா்நிலையில் எந்த அளவுக்கு மண் அள்ளப்பட்டது என தமிழக அரசின் வருவாய், கனிம வளத் துறை அலுவலா்கள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களுக்கு பதவி உயா்வு!

அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் பேருந்து நடத்துநா்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளா்கள் பதவி உயா்வுக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா்களில் ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

சிஎஸ்ஐ அமைப்புகளின் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

சி.எஸ்.ஐ. அமைப்புகளின் நிா்வாக முறைகேடுகள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சோ்ந்த ஆஸ்டின் என்பவா் சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சி மாநாடு: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மனித நேய மக்கள் கட்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) நடைபெற உள்ளதால், மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க