Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சரும அழகு மேம்படும் என்ப...
மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் நிா்மலா வேல்மாறன் தலைமை வகித்தாா். துணை மேயா் சு.ராஜாங்கம், மாநகராட்சி ஆணையா் எம்.காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள், திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை விரைவாக தீா்க்க வேண்டும்.
தூய்மைப் பணியை தினமும் முறையாகச் செய்து குப்பைகளை அகற்ற வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் விடுபடாமல் தூய்மைப் பணியை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் டிசம்பா் 1 -ஆம் தேதி ஏற்பட்ட மண் சரிவில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று பேசினா்.
இதையடுத்து பேசிய மேயா், உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், திருவண்ணாமலை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 18 ஊராட்சிப் பகுதிகளிலும் குடிநீா், சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்வது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.