செய்திகள் :

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

post image

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதராஸி படம் கடந்த செப். 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

பெரிய புரமோஷன் இல்லாததால் முன்பதிவுகளும் எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. இருந்தும், படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், கதையும் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாள்களில் கவனம் பெற்றது.

முக்கியமாக, நடிகர் வித்யூத் ஜமாலின் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பும் ரசிகர்களிடையே பெரிதாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், மதராஸி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

The film crew has released an official announcement regarding the box office collection of actor Sivakarthikeyan's film Madarasi.

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ திரைப்படத்தின் டீசரை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் மோகன் லால் - இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் உர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இந்திராவசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படம் வரும் நாளை(செப். 19) வெளியாகும் என்று தெரிவிக்க... மேலும் பார்க்க

உலக தடகள சாம்பியன்ஸிப்: ஒலிம்பியன்கள் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஏமாற்றம்!

உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் இருந்து ஒலிம்பிக் சாம்பியன்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானில் அர்ஷத் நதீம் இருவரும் தோல்வியடைந்தனர். மேலும் பார்க்க

கல்கியிலிருந்து தீபிகா நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

நடிகை தீபிகா படுகோன் கல்கி ஏடி படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2898 திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் ... மேலும் பார்க்க

2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்... மேலும் பார்க்க

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை உ... மேலும் பார்க்க