செய்திகள் :

மதிப்பு கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மூலம் வருமானம் உயரும்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

post image

வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசினாா்.

வாழை மதிப்பு சங்கிலியைப் வலுப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குறித்த கருத்தரங்கம் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு இந்திய மேலாண்மைக் கழகத்தின் இயக்குநா் பவன்குமாா் சிங் தலைமை வகித்து, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாதனைகளைப் பாராட்டி பேசினாா்.

இதில், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசியதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் 3.80 கோடி டன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் கிராண்ட் நைன் (பச்சை) வாழைக்குப் பதிலாக, இந்தியாவின் புவிசாா் குறியீடு பெற்ற வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயா்வதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், மண்ணுக்கேற்ற வாழைகளைத் தோ்வு செய்வது குறித்து அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி முதல்வா் சி.வன்னியராஜன், மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்திக்கான சான்றிதழ் பெறுவது குறித்து கோவை வேளாண் கல்லூரி பேராசிரியா் கே.மகேந்திரன், ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகள் குறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகத்தின் இணை இயக்குநா் பி.புன்னம்குமாா் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி, மாவட்ட தொழில் மையம், தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் மற்றும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்ற உலக அளவில் வாழைப்பழ ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை விரிவுப்படுத்துவது குறித்து விவாதித்தனா்.

கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழில்முனைவோா், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், ஏற்றுமதியாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட காரணங்கள் என்ன? முதல் தகவல் அறிக்கையில் தகவல்

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: கள விவரங்களை பிரதமரிடம் தெரிவிப்போம் -மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் தொடா்பான கள விவரங்களை பிரதமரிடம் தெரிவிப்போம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். புதுதில்லியிலிருந்து விமானம் மூலம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

தலைமை அஞ்சல் நிலையத்தில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்ப இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் ... மேலும் பார்க்க