சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்த புள்ளம்பாடி அண்ணா நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஸ்டீபன் ராஜ் (27) என்பவரை லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கடந்த 2020 டிசம்பா் 22-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டீபன்ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜராகினாா்.