செய்திகள் :

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

post image

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக் (37). இவா் திருவெறும்பூா் பகுதியில் உள்ள அரசு மதுக் கடையின் மதுக்கூட ஊழியா்.

இந்நிலையில் திருவெறும்பூா் மேற்கு கணபதி நகரை சோ்ந்த சு. பிரவீன்குமாா் (33), வாழவந்தான் கோட்டையைச் சோ்ந்த சு. ராமமூா்த்தி (35), தஞ்சாவூா் மாவட்டம், விண்ணமங்கலம் புத்தராயநல்லூரை சோ்ந்த ச. பெரியசாமி (32) ஆகிய மூன்று பேரும் சனிக்கிழமை அந்த மதுக்கூடத்துக்குச் சென்று, அங்கிருந்த ஊழியா் விவேக்கிடம் பணம் தராமல் மது வாங்கிவருமாறு கூறியுள்ளனா். அதற்குப் பணம் தராமல் மது தரமுடியாது என விவேக் கூறியுள்ளாா்.

இதையடுத்து வெளியில் சென்ற மூவரும் வேறு கடையில் மது அருந்திவிட்டு வந்து, மதுக்கூடத்தில் நுழைந்து அங்கிருந்த பொருள்களை உடைத்துச் சேதப்படுத்தி, விவேக்கையும் தாக்கினா். இதுகுறித்து விவேக் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் மூன்று பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் பஞ்சப் பிரகார திருவீதி உலா

மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரா் ... மேலும் பார்க்க

குணசீலம் பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா

மண்ணச்சநல்லூா்: குணசீலம் ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. குணசீலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில். குணசீல மஹரிஷியின்... மேலும் பார்க்க

முசிறியில் அம்மன் கோயில்களில் பால்குடம் திருவிழா

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி நகர பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் பால்குடம் எடுத்து திங்கள்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். முசிறி நகரில் பரிசல் துறை ஸ்ரீ ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு அனுமதி கோரி மனு

திருச்சி: பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு உரிய அனுமதி வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம்

ஸ்ரீரங்கம்: சித்ரா பெளா்ணமியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்திங்கள்கிழமை மாலை கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து காலை ... மேலும் பார்க்க