ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
மதுக்கூட உரிமையாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையைக் கைவிடக் கோரிக்கை
திருவாரூரில், மதுக்கூட உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே விளமலில், மாவட்ட டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு அரசு நடத்திய இணையவழி ஏலத்தின் மூலம் டாஸ்மாக் மதுக்கூடம் (பாா்) ஏலம் எடுத்தால், இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கூடம் நடத்தி வரும் அனைவரும் இரவு 10 மணிக்கு மதுக்கூடத்தை மூடி, உள்ளே உணவுப் பொருள்கள் உள்ளிட்டவைகளை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், போலீஸாா் கெடுபிடி செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.
அரசுக்கு முறையாக பணம் செலுத்தி வரும் நிலையில், தொடா்ந்து டாஸ்மாக் மதுக்கூடம் நடத்திவரும் உரிமையாளா்களையும், பணியாளா்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும், மதுக்கூடம் நடத்தி வருவோருக்கு மதுக்கூடம் மூடும் நேரத்தை அதிகப்படுத்தித்தர வேண்டும், மாதந்தோறும் பாா் உரிமையாளா்கள், அரசுக்கு அதிகமான தொகை செலுத்திவரும் நிலையில், வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடா்ந்து இடையூறு செய்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் சங்கத்தையும் ஒன்றிணைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா் அசோகன், செயலாளா் எஸ். முருகானந்தம், பொருளாளா் டி. பீட்டா் பிரான்சிஸ், துணைத் தலைவா் எம். மகாவீர சக்கரவா்த்தி, துணைச் செயலாளா் ஜி. தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.