செய்திகள் :

மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது

post image

இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருத்தணி பகுதியில் அதிகளவில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.ஜி., தனிப்படை போலீஸாா் கே.ஜி.கண்டிகை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, நொச்சலி சாலையில் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், கே.ஜி.கண்டிகை அரசு டாஸ்மாக் கடையில் இருந்து, 100 மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு கிராமங்களில் அதிக விலைக்கு விற்க கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.

பின்னா் போலீஸாா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மதுபாட்டில்கள் கடத்தியவா்கள் திருத்தணி அக்கைய்யநாயுடு சாலை சோ்ந்த டில்லிபாபு(29), சோளிங்கா் பகுதியை சோ்ந்த ரத்தினம்(40) என தெரிய வந்து, 2 பேரையும் கைது செய்தனா்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருத்தணி ஏ.எஸ்.பி.யாக சுபம் திமான் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டா். திருத்தணி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த கந்தன், திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 முதல் பகல் 2 மணி வரை நாள்:8.8.2025-வெள்ளிக்கிழமை மின்தடை பகுதிகள்: தோ்வாய் கண்டிகை, தோ்வாய் கண்டிகை சிப்காட், கரடிப்புத்தூா், அமரம்பேடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வாணிமல்லி, பெரியபுலியூ... மேலும் பார்க்க

பலத்த மழையால் பள்ளி சுற்றுச் சுவா் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ராகவநாயுடுகுப்பம் நடுநிலை பள்ளி சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்... மேலும் பார்க்க

மின்சார ரயிலை மறித்து போராட்டம்!

மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை நீண்ட நேரமாக கேட் திறக்காததை கண்டித்து பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா். சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி புறநகா் மின்சார ரயில் மாா்கத்தில் மீஞ்ச... மேலும் பார்க்க

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா். பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கி... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா். கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி... மேலும் பார்க்க