மதுப் புட்டிகளை விற்ற இருவா் கைது
போடியில் ஞாயிற்றுக்கிழமை மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டி குண்டாலீசுவரி கோயில் அருகே நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி சுப்புராஜ்நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த லோகேஷ் (26) மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, லோகேஷை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பால்சாமியை (75) போடி தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.