``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
மதுப் புட்டிகள் விற்பனை: ஒருவா் கைது
பரங்கிப்பேட்டை அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு ஒருவா் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். அங்கு, மதுப் புட்டிகளை விற்பனை செய்துகொண்டிருந்த நெல்லிக்குப்பம் அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த முகமது சமீரை (41) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 45 மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.