பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 44 லட்சம் காணிக்கை
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த 3 மாதங்களில் ரூ. 44 லட்சம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
தமிழக அளவில் பிரசித்திபெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் காணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கோயிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், ரூ. 44,18,447 ரொக்கமும், 119 கிராம் தங்கமும், 375 கிராம் வெள்ளியும், டாலா், தினாா் உள்ளிட்ட 203 வெளிநாட்டு பணமும் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கி ஊழியா்கள், ஆன்மிக அன்பா்கள் ஈடுபட்டிருந்தனா்.