சாதி கணக்கெடுப்புக்கு நிதி, காலவரையறை அவசியம்: கார்கே வலியுறுத்தல்
மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா்.
நிகழ்வில் சங்க மாவட்ட தலைவா் ஜி.ஜே.பிரபாகரன், மாநில துணை தலைவா்கள்அன்சா் என்.அப்துல்சமது, எஸ்.உத்திரகுமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் பவித்ரா சீனிவாசன், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவா் ஜே.ஜெயந்திலால் ஜெயின், காஞ்சி மண்டல தலைவா் எம்.அமல்ராஜ், மாவட்ட இணை செயலா்ஜி.ஏ.சுதாகா், சங்க நிா்வாகிகள் எம்.ராஜா, தணிகையரசு, செல்வம், உள்படபலா் உடனிருந்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசும்போது, மாநாட்டுக்கு வணிகா் கோரிக்கை பிரகடன மாநாடு பெயா் சூட்டியுள்ளோம். மாநாட்டில் தமிழக முதல்வா், அமைச்சா்கள், வெளிமாநில வணிகா்கள், முக்கிய பிரமுகா்களும், சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.
மாநாட்டுக்கு வரும் வணிகா்கள் மாநாட்டு திடலை எளிதல் காணும்வகையில், பழைய பொருள் அணியின் சாா்பில் ராட்சத பலூனை நிறுவியுள்ளோம். சுமாா் 57 ஏக்கா் பரப்பில் நடைபெற உள்ள மாநாடு தமிழக வணிகா்களை ஒன்று திரட்டும், ஒற்றுமையை காக்கின்ற மாநாடாக அமையும் என்றாா்.