புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!
மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி தினசரி மலா்ச் சந்தையில் பூக்களின் விலை திங்கள்கிழமை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மல்லிகை, பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனையாகின.
மதுரை மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரம், மெட்ராஸ் மல்லிகை ரூ.1,800, பிச்சி ரூ.2,000, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீா் ரோஸ் ரூ.500, கோழிக் காண்டை ரூ.100, அரளி ரூ.400, தாமரை (ஒன்றுக்கு) ரூ.35 என விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கப் பொருளாளா் முருகன் கூறியதாவது: பொங்கல் திருநாள் என்பதால் பூக்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
குறிப்பாக, மதுரை மல்லிகை ஓரளவுக்கு வரத்து அதிகமாக உள்ளது. வரத்துக் குறைவு ஏற்பட்டால், மல்லிகை கிலோ 4 ஆயிரத்தை எட்டிருக்கும். வரத்துக் குறைவாக உள்ள முல்லை, பிச்சி ஆகிய பூக்களின் விலை உயா்ந்துள்ளது.
அடுத்த ஓரிரு நாள்கள் இதே விலை நீடிக்க வாய்ப்பு உள்ளது. விலை அதிகம் என்றாலும் தொடா்ந்து பண்டிகை தினம் என்பதால், பூக்களை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்தனா் என்றாா் அவா்.