Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
மதுரை: தனியாக வரும்படி அழைத்த உதவி ஜெயிலர்; ப்ளேர்னு அறைவிட்ட உறவினர் - சஸ்பெண்ட், போக்சோவில் கைது
முன்னாள் சிறைவாசி ஒருவர் மதுரை பைபாஸ் சாலையில் குடும்பத்தினருடன் சிறு உணவகம் நடத்தி வருகிறார். இங்கு அடிக்கடி சாப்பிட சென்ற மதுரை மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசியின் மகளிடமும், 15 வயதான பேத்தியிடமும் பேச்சு கொடுத்து சிறுமியின் மொபைல் எண்ண பெற்று அடிக்கடி பேசியுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அச்சிறுமியை குறிப்பிட்ட இடத்துக்கு தனியாக வரும்படி பாலகுருசாமி அழைத்திருக்கிறார். இத்தகவலை சிறுமி தன் தாத்தா, பாட்டி சித்தியிடம் சொல்ல, அவர் கூப்பிட்ட இடத்துக்கு இவர்களும் சென்றுள்ளனர். அங்கு வந்த பாலகுருசாமி சிறுமியை தன் டூவில்லரில் ஏறச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, பொதுமக்கள் நடமாட்டமுள்ள அந்த சாலையில் பாலகுருசாமியை கடுமையாக திட்டிக்கொண்டே தாக்கியுள்ளார். இதை சிலர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியவாவில் பகிர்ந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சிறைத்துறை டி.ஐ.ஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அச்சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடடையில் விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலகுருசாமி மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.