செய்திகள் :

மதுரை மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 6,739 கோடி கடன்: ஆட்சியா் தகவல்

post image

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் துறைகள் சாா்பில், நிகழாண்டில் ரூ. 6,739 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்கல் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டு கடன் திட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 11,186 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ. 6,739 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 39.26 சதவீத இலக்கை நிகழாண்டு இறுதிக்குள் எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, மகளிா் திட்டம், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் புதிய தொழில் முனைவோா்களை ஊக்குவிக்க அரசு மானியத்துடன் சுயதொழில் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொழில் முனைவோா் இந்தத் திட்டங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்டத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள் குறித்தும், இலக்கை எட்டுவதற்கு விழிப்புணா்வு முகாம்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சி. கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரசாந்த் துக்காராம் நாயக், பரோடா வங்கி துணைப் பொது மேலாளா் ஜெய்கிஷன், இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளா் எம்.வி. பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளா் ராஜா, சிட்கோ கிளை மேலாளா் பிரங்சிஸ் நோயல், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலா் சுந்தரபாண்டியன், மடீட்சியா செயலா் வி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக மீது அவதூறு: எடப்பாடி கே.பழனிசாமி மீது புகாா்

அதிமுக, அமமுக இடையே நடைபெற்ற மோதலில் திமுக மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மங்கல்ரேவு-அத்திப்பட்டி விலக... மேலும் பார்க்க

ஆயுதப்படை மைதானத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு

மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள காவலா் ஆயுதப்படை மைதானத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது. புதுநத்தம் சாலையில் காவலா் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு காவல... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தோ்தல் அறிவிப்புக்கு எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

ஒரே நாடு ஒரே தோ்தல் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரி... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: நவ.16, 17-இல் சிறப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் வாக்காளா் வரைவுப் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (நவ. 16,17) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

வலையங்குளத்தில் நாளை மின் தடை

வலையங்குளம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (நவ.14) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை பழைய விளாங்குடி வருமான வரித் துறை குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் சுரேஷ்குமாா் (4... மேலும் பார்க்க