செய்திகள் :

மதுரை: வாழ்வை மாற்றும் அனுஷ வழிபாடு... மகாபெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்

post image

காஞ்சி மடத்தின் ஆசார்யர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். இந்தப் பூவுலகில் தர்மம் தளைக்கப்பாடுபட்ட அந்த மகானை பக்தர்கள், 'மகாபெரியவர்' என்று அன்புடன் அழைத்தனர். வாழும்போதும் பலரின் துன்பங்களைத் தன் பார்வையால் தீர்த்துவைத்த அந்த மகான் ஸித்தி அடைந்தபிறகும் சூட்சுமமாக இருந்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்.

மகாபெரியவர் அவதாரம் செய்த நட்சத்திரம் அனுஷம். மாதம் தோறும் வரும் அனுஷ நட்சத்திர நாளை மகாபெரியவரின் பக்தர்கள் விசேஷ ஆராதனைகளைச் செய்து அவரை வழிபடுவது வழக்கம். அனுஷத்தன்று காஞ்சி மகானை நினைத்து வழிபாடு செய்து தொடங்கும் செயல்கள் அனைத்தும் நன்மையாக முடியும் என்பது நம்பிக்கை.

அனுஷ உற்சவம்

வீட்டில் சுபகாரியத் தடைகள் இருப்பவர்கள் அனுஷ நட்சத்திர நாளில் காஞ்சி மகானின் படத்துக்கு ஒரு மலரேனும் சாத்தி வழிபட்டால் தடைகள் விலகும் என்கிறார்கள் பக்தர்கள். எனவேதான் காஞ்சி பெரியவரின் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இந்த நாளில் விசேஷ வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவருக்கு மாதந்தோறும் அனுஷ நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று அனுஷ நட்சத்திரத்தை ஒட்டி விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. மகாபெரியவர் திருமேனி மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை எஸ்.எஸ் காலனியிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சன் திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன . தொடர்ந்து ருத்ரா அபிஷேகமும் நடைப்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த வைபவத்தை தரிசனம் செய்தனர். இந்நிகழ்வினை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்த மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு முன்னின்று நடத்தினார். நிறைவாக நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி... பூஜை செய்ய நல்ல நேரம் முதல் பூஜை முறைகள் வரை!

விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. விநாயகர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவரது தோற்றம். மற்றும் அவரது எளிமை. கோயில் வேண்டும் என்று இல்லை. அரச மரத்தடியிலும் ஆலமரத்தடியிலும்... மேலும் பார்க்க

Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்? விநாயகர் சதுர்த்தி

தமிழ் மாதமான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை நாம் விநாயகர் சதுர்த்தி என்று சிறப்பாகக் கொண்டாடுகிறோம். புராணங்களின்படி, அன்றைய தினமே விநாயகப் பெருமான் அவதாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அனைவராலும் நேசி... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி: ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் கோயிலில் ஆனந்தமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை அருகில் குரும்பப்பட்டி என்னும் குக்கிராமத்தில் ஸ்ரீ கோகுலகிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணரைக் கொண்டாடும் விதமாக ஹ... மேலும் பார்க்க

18-ம் படி கருப்பணசாமி: `பணத்தை தர்றியா கருப்புகிட்ட வர்றியா?' - கதவு திறக்கும் வைபவம்

"உங்கிட்ட நான் கை நீட்டிக் காசு வாங்கல. வாங்கினேன்னு நீ சொன்னா அதுக்கு சாட்சி இருந்தாக் கூட்டிக்கிட்டு வா... எங்க வேண்ணா போ... எந்தக் கோர்ட்ல வேணும்னாலும் கேஸ் போடு. உன்னால ஆனதப் பாரு. என்னால் ஆனத நான... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குழந்தைகளை ஏலம் விடும் பெற்றோர்... தேவாலயத்தில் வினோத திருவிழா!

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வ... மேலும் பார்க்க