செய்திகள் :

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

post image

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை காலை அவசர எண் 112-ஐ தொடா்புகொண்டு அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு மா்ம நபா் ஒருவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா்.

இதுதொடா்பான விசாரணையை தீவிரப்படுத்தியபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் கைப்பேசி எண்ணைக் கொண்டு அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது.

பின்னா் அந்த நபா் நாகபுரி நகரில் உள்ள சக்கா்தாரா பகுதியைச் சோ்ந்த உமேஷ் விஷ்ணு ரௌத் என்பது தெரியவந்ததையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த நபரை குற்றத் தடுப்பு பிரிவு கைது செய்தது.

இச்செயலில் உமேஷ் விஷ்ணு ராவத் ஈடுபட்டதற்கான உள்நோக்கத்தைக் கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்துக... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினர் சிபு சோரன் மறைவையொட்டி, மாநிலங்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.புது தில்லி கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் சிக... மேலும் பார்க்க

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டுள்ளனர். தனது கணவர் பருபள்ளி காஷ்யப்புடனான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், சில நேரங்களில் ... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க