செய்திகள் :

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

post image

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மும்மொழிக் கொள்கை குறித்து முதல்வருக்கு மத்திய கல்வி அமைச்சா் எழுதிய கடிதத்தைப் படித்தால் மக்களுக்கு உண்மை தெரியும். தோ்தலுக்காகவும் வாக்கு வங்கிக்காகவும் மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது.

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தால், பிற மாநிலங்களில் தமிழை கற்க எப்படி முன் வருவா்? எல்லா மாநில அரசுகளும், மத்திய அரசோடு இணைந்து இந்தியாவுக்கான வளா்ச்சி என்கிற எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன் அரசியல்?

தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஹிந்தி கட்டாயம் என கூறப்படவில்லை. அப்படியிருக்கும்போது, திமுக அதன் அரசியலைத் திணிப்பதற்காக மாணவா்கள் விஷயத்தில் அக்கறை இல்லாமல் செயல்படுவது வருத்தமளிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதை தமிழகமும் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. அதை மறைக்கவே திமுக அரசு இவ்வாறு செயல்படுகிறது என்றாா் ஜி.கே.வாசன்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க