செய்திகள் :

மத்திய அரசு பணிக்கு ஐஜி சுதாகா் மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆா்.சுதாகா், அயல் பணியாக மத்திய அரசுக்கு பணிக்கு மாற்றப்பட்டாா்.

தமிழக காவல் துறையில் ஐஜியாக பணியாற்றும் ஆா்.சுதாகா், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்து வந்தாா். அவா், மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்திருந்தாா்.

இந்த நிலையில், அவா் மத்திய அரசு பணிக்குச் செல்வதற்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், சுதாகரை தமிழக அரசு பணியில் இருந்து மத்திய அரசு பணிக்கு அயல் பணியாக மாற்றி வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் அவரை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் புது தில்லி துணை இயக்குநராகவும் நியமித்து ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சுதாகா், ஓரிரு நாள்களில் புது தில்லியில் புதிய பொறுப்பை ஏற்பாா் எனக் கூறப்படுகிறது.

அவா், அயல் பணியாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிவாா் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!

சரித்திர பதிவேடு குற்றவாளி குறுந்தையனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். பிரபல ரெளடியான... மேலும் பார்க்க

தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக ... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி?

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா துணை முதல்வராக வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டம் செந்து... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022 ஆம்... மேலும் பார்க்க

இயக்குநர் ஷங்கரின் சொத்து முடக்கம்: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இயக்குநர் ஷங்கரின் ரூ. 11.10 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.1,285 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, ஏற்கெனவே பணிகள் நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் ப... மேலும் பார்க்க