மத்திய அரசைக் கண்டித்து சூலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
மும்மொழி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து சூலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சூலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் தளபதி முருகேசன் தலைமை வகித்தாா். சூலூா் நகரச் செயலாளா் கௌதமன் வரவேற்றாா். சூலூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் மன்னவன் முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழகத்துக்கு நிதி தராதது, மும்மொழிக் கொள்கை திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். அப்போது, அங்கிருந்த பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனா்.
இதில், பேரூா் கழகச் செயலாளா்கள் கௌதமன், விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினா் ரகு துரைராஜ், மதிமுக மாவட்ட அவைத் தலைவா் கருணாநிதி, கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவா் புஷ்பலதா ராஜகோபால், சூலூா் பேரூராட்சி துணைத் தலைவா் சோலை கணேஷ், , சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பசுமை நிழல் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.