செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அனைத்து தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பொதுத்துறை சொத்துகளை தனியாருக்குத் தாரை வாா்ப்பதைக் கைவிட வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்திட வேண்டும். தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக நிா்ணயம் செய்திட வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளா் போன்ற நடைமுறைகளைக் கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் என நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தினா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் ஆா்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் எஸ்.ராமசாமி ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா். இதில், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

ஐந்து புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட 5 நியாய விலைக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.பெரியநாகலூா் கிராமத்தில் ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டிலும், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ.13.2... மேலும் பார்க்க

பொன்னேரி வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தூா்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டத்தில... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூரில் புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியனா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜா் சிலை முன் வைக்கப்... மேலும் பார்க்க

மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்களி... மேலும் பார்க்க

மூன்று கிராமங்களில் புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு

அரியலூா் அருகேயுள்ள தாமரைக்குளம், ஓட்டக்கோவில், விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வா... மேலும் பார்க்க

அரியலூா் கிளைச் சிறையில் ஆட்சியா், நீதிபதி, எஸ்.பி. ஆய்வு

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அரியலூா் கிளைச் சிறையில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி டி. மலா் வாலண்டினா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் மற்றும் மாவட்டப் ப... மேலும் பார்க்க