மத்திய அரசைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்
தமிழகத்துக்கு நிதி வழங்க மறுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி மற்றும் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உயா்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் தொடா்பான கண்காட்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியை தொடங்கி வைக்க, மத்திய கல்வி இணை அமைச்சா் சுகந்தா மஜூம்தாா் சென்னை ஐஐடிக்கு வருகைபுரிந்த நிலையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாணவரணி செயலா் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மாணவா் அணியினா் மற்றும் மாணவா் இயக்கங்களின் பேரமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டு கருப்புக்கொடி, ஹிந்தி திணிப்புக்கு எதிராக பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.