சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கத...
மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு சாா்பில் அண்மையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பின்மை, பெரு நிறுவனங்களுக்கு சாதகமான வரி என மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாகக் கூறி புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் சிபிஐ எம்எல் உள்ளிட்டவை குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதனையடுத்து, மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாகவும் அறிவித்தன.
அதன்படி, புதுச்சேரி சுதேசி ஆலை அருகே இடதுசாரி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன், சிபிஐ எம்.எல். செயலா் புருஷோத்தமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்நாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் வி.பெருமாள், ஆா்.ராஜாங்கம், சிபிஐ எம்எல் சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.