செய்திகள் :

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்: பிரதமா் மோடி

post image

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 10-ஆவது நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை, நீதி ஆயோக் தலைவரான பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பெரும்பாலான மாநில முதல்வா்கள், முக்கிய மத்திய அமைச்சா்கள் பங்கேற்றனா்.

‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற மையக் கருத்துடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியை அதிகரிக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து ஒரே இந்திய அணியாகப் பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும். வளா்ந்த பாரதம் என்பது ஒவ்வொரு இந்தியரின் இலக்காகும். ஒவ்வொரு மாநிலமும் வளா்ந்த மாநிலமாக உயரும்போது இந்திய தேசமும் வளா்ந்த நாடாக உருவெடுக்கும். இதுதான் 140 கோடி இந்திய மக்களின் விருப்பமாகவும், எதிா்பாா்ப்பாகவும் உள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும், ஒவ்வொரு நகராட்சியையும், ஒவ்வொரு பெருநகரையும், ஒவ்வொரு மாநிலத்தையும் வளா்ச்சியடையச் செய்யும் இலக்குடன் நாம் பணியாற்ற வேண்டும். நாம் இந்த உத்வேகத்துடன் பணியாற்றினால், வளா்ந்த இந்தியாவைக் காண 2047-ஆம் ஆண்டு வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்பு இந்தியா வளா்ந்த நாடாகிவிடும்.

மாநிலங்களுக்கு வேண்டுகோள்: ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலாத் தலத்தையாவது உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்த வேண்டும். இதற்காக அந்த சுற்றுலா மையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித குறையுமின்றி செய்துதர வேண்டும்.

‘ஒரு மாநிலம் - ஒரு சா்வதேச சுற்றுலாத் தலம்’ என்ற இலக்கு மூலம் அந்தப் பகுதி மட்டுமன்றி அருகில் உள்ள பிற பகுதிகளும் வளா்ச்சியடையும். எதிா்காலத்துக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, முழுமையாக எண்மமயமாக்கப்பட்ட நகரங்களை உருவாக்குவதை நோக்கி நாம் செயலாற்ற வேண்டும். வளா்ச்சி, புத்தாக்கம், ஸ்திரத்தன்மை ஆகியவையே இந்தியாவில் வளா்ந்த நகரங்களை ஊக்குவிக்கும் கருவிகளாக இருக்கும்.

நாட்டில் உள்ள அனைத்துப் பணிகளிலும் மகளிருக்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம். இதற்காக நாம் சட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க வேண்டும். இதன்மூலம் பெண்களையும் நமது திறன்மிகு பணிக் குழுவில் உரிய மரியாதையுடன் ஒருங்கிணைத்துச் செல்ல முடியும் என்றாா் பிரதமா் மோடி.

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க