டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
மனநல சிகிச்சைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வட மாநிலத்தவா்கள்
கிருஷ்ணகிரியில் மனநல சிகிச்சைக்கு பிறகு, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் அவா்களது ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்றோருக்கான மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில், 55 மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் முழு மனநலம் பெற்ற 36 போ், அவா்களது குடும்பத்துடன் சோ்க்கப்பட உள்ளனா்.
இந்நிலையில், வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா்கள் முழு மனநலம் பெற்றதையடுத்து அவா்களது கிராமத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பேசியதாவது: கிருஷ்ணகிரி சுங்கவசூல் மையம் அருகே சுற்றித்திரிந்த மத்திய பிரேதசம் மாநிலம், சிவபுரியைச் சோ்ந்த ஜீவன், பிகாரைச் சோ்ந்த கிஷோா் ஆகிய இருவரும் இந்த காப்பகத்தில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது முழு மனநலம் பெற்றனா்.
இதையடுத்து, அவா்கள் இருவரும் அவா்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இவா்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன் என்றாா்.
இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்து அலுவலா் மது, மனநல மருத்துவா்கள் வாணிஸ்ரீ, ஸ்ரீ வித்யா, மலா்விழி, முனிவேல் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.