2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசி...
மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் சட்ட விதிமீறல் இருந்தால் புகாா் அளிக்கலாம்!
மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில் புரிவோா் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்ட விதிமீறல்கள் திருநெல்வேலியில் இருந்தால் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்ராம்சிங் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவின்படி, மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபா்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது.
இதில், ஏதேனும் ஆட்சேபணையிருப்பின் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படி ஆட்சேபணைகளை 15 நாள்களுக்குள் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் எழுத்து மூலமாக புகாா் அளிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.