செய்திகள் :

மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!

post image

நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து கூடுதலாக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த சக்திவாய்ந்த தொடா் நிலநடுக்கங்களால் அந்நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழப்பு 3,300-ஆக உயர்ந்திருப்பது கவலையளிக்கும் நிலையில், சுமார் 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளனா்.

இதனிடையே, மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ், பல நூறு டன் நிவாரணப் பொருள்களையும், மீட்புக் குழுவினரையும், மருத்துவக் குழுவையும் இந்தியா அங்கு அனுப்பியுள்ளது.

மியான்மருக்கு மனிதாபிமான உதவியாக இந்தியாவிலிருந்து கடந்த ஒரு வார காலத்தில் பல டன் அளவிலான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாகப்பட்டினத்திலிருந்து 442 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருள்களுடன் புறப்பட்ட கடற்படைக் கப்பல் மியான்மரின் திலாவா துறைமுகத்தை சனிக்கிழமை(ஏப். 5) சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்க... மேலும் பார்க்க

பண முறைகேடு குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி அமெரிக்க நீதிபதி கைது!

அமெரிக்காவில் பண முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய வம்சாவளி நீதிபதி கே.பி.ஜாா்ஜ் கைது செய்யப்பட்டாா். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோா்ட் பெண்ட் மாவட்ட நீதிபதியாக 2018-ஆம் ஆண்டுமுதல் ... மேலும் பார்க்க

மேற்குக் கரைக்குள் நுழைய 2 எம்.பி.க்களுக்கு தடை: இஸ்ரேலுக்கு பிரிட்டன் அரசு கண்டனம்!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிக்குள் நுழைய பிரிட்டனின் ஆளும் தொழிலாளா் கட்சியின் 2 எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினா் இ... மேலும் பார்க்க

அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டி... மேலும் பார்க்க

குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!

கான் யூனிஸ்: காஸாவில் குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடத்தியுள்ள தாக்குதல்களில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.க... மேலும் பார்க்க

கழிவுநீரை ஆற்றில் கலக்கும் மெக்சிகோ: கூட்டாட்சிக்கு அழைக்கும் அமெரிக்கா

மெக்சிகோ, கழிவுநீரை ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர... மேலும் பார்க்க