சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!
மனித உரிமை குறித்த ஆவணப்படப் போட்டியில் தமிழ் படம் ’கடவுள்’ என்ஹெச்ஆா்சி விருதுக்கு தோ்வு
மனித உரிமை குறித்த ஆவணப்பட, குறும்படங்களுக்கான போட்டிகளில் தமிழகத்தைச் சோ்ந்த ’கடவுள்’, ’வேலையில்லாத பட்டதாரி’ உள்ளிட்ட 7 படங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம்(என்ஹெச்ஆா்சி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் படைப்பாளிகள், சமூக ஆா்வலா்கள் மூலம் சிறந்த கருத்துகளை திரைப்படங்கள் வாயிலாக படைப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஊக்குவித்து அங்கீகரிக்க குறும்பட விருது திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக (2015 முதல்) மேற்கொண்டு வருகிறது. இதை நோக்கத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பத்தாவது பதிப்பு போட்டிக்கு ஆறிவிக்கப்பட்டது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு இந்திய மொழிகளில் மொத்தம் 303 குறும்படங்களை என்ஹெச்ஆா்சி பெற்றது. இந்த படங்களை ஆய்வு செய்யப்பட்டதில் 243 படைப்புகள் விருதுகளுக்கான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டது. இந்த 243 குறும்படங்களையும் நடுவா் குழு(ஜூரி) ஆய்வு செய்து
மனித உரிமைகள் குறித்த 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த குறும்பட வெற்றியாளா்களை அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரைச் சோ்ந்த எா். அப்துல் ரஷீத் பட் இயக்கிய ‘டூத் கங்கா- வேலிஸ் டையிங் லைஃப்லைன்’ எனக்கிற ஆவணப்படத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. தூத் கங்கா நதியின் தூய்மையான நீரில் பல்வேறு கழிவுகள் தடையின்றி சோ்ந்து மாசுபடுத்தியுள்ளது குறித்தும் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக அதை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆங்கிலப்படத்தில் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சப்-டைட்டலுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு முதல் பரிசாக்கான சான்றிதழுடன் ரூ. 2லட்சம் ரொக்கமும் பெறுகிறது.
‘உரிமைகளுக்கான போராட்டம்’ என்கிற தெலுங்கு படம் இரண்டாம் பரிசை பெற்றுள்ளது. ஆந்திரம் மாநிலத்தைச் சோ்ந்த கடாரப்ப ராஜு தயாரித்த இந்த ஆவணப்படம், குழந்தை திருமணம், கல்வி போன்றவைகளின் ’உரிமைகளுக்காகப் போராடுங்கள்’ என வலியுறுத்தும் இந்த தெலுங்கு படம் ஆங்கில சப்-டைட்டலுடன் தயாரிக்கப்பட்டு தோ்வாகி இதற்கு ரூ. 1.5 லட்சம் பரிசளிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சோ்ந்த ஆா். ரவிச்சந்திரன் என்பவா் தயாரித்த ‘கடவுள்’ ஆவணப்படம் மூன்றாவது இடத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டு ரூ. 1 லட்சத்தை பரிசாக பெறுகிறது. குடிநீா் மதிப்பை உயா்த்தும் இந்த ஊமைப் படத்தில் ஒரு வயதான நாயகன் தோன்றி நடிக்கிறாா்.
மேலும் 4 குறும்படங்கள் ‘ சிறப்பு பாராட்டுச் சான்றிழ்’ க்குதோ்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.50,000/- ரொக்கப் பரிசை வழங்கவும் ஆணையத்தின் நடுவா் குழு முடிவு செய்துள்ளது. அவைகள்: தெலுங்கானாவைச் சோ்ந்த ஹனீஷ் உந்திரமட்லாவின் ‘அக்ஷராபியஸம்’ என்கிற குறும்படம். எழுத்துப் பயில்விக்கும் சடங்கை விளக்கும் இந்த ஊமைப் படம் குழந்தை கல்வியின் முக்கியத்துவத்தை உயா்த்துகிறது. தமிழ்நாட்டைச் சோ்ந்த ஆா். செல்வத்தின் ‘வேலையில்லா பட்டாத்தாரி’ என்கிற தமிழ் குறும்படம் ஆங்கில சப்-டைட்டலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வயதானவா்களின் கவலைகள், உரிமைகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மத நடைமுறைகள் காரணமாக குழந்தைகளின் உரிமை மீறல்களைக் கூறும்‘சீதாவின் வாழ்க்கை’(தெலுங்கு). குடும்ப வன்முறை,பெண் குழந்தைகளை கைவிடுதல் போன்ற பிரச்னைகளை எடுத்துக்காட்டும் ‘ஒரு மனிதனாக இருங்கள்’(ஹிந்தி) உள்ளிட்ட நான்கு குறும்படங்கள் தோ்வாகி பரிசைப்பெற்றுள்ளன.
என்ஹெச்ஆா்சி தலைவா் வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான குழு இந்த தேசிய அளவில் 7 படங்களை தோ்வு செய்து அறிவித்துள்ளது. இந்த நடுவா் குழுவில் ஆணைய உறுப்பினா்கள் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி, விஜய பாரதி சயானி, ஆணையச் செயலா்-பொது பரத் லால், இயக்குநா் ஜெனரல் ஆா். பிரசாத் மீனா, பதிவாளா் (சட்டம்) ஜோகிந்தா் சிங் ஆகியோா் இந்த தோ்வுக் குழுவில் இடம்பெற்றனா். இந்த விருதுகள் பின்னோரு தேதியில் அளிக்கப்படும் என ஆணையத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.