செய்திகள் :

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

post image

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகிராமில் வசித்து வந்தார். ஏற்கெனவே திருமணமாகி குழந்தை பெற்று தந்தையான அவருக்கு 27 வயதான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தில்லியின் அசோக் விஹாரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஓராண்டாக இருவரும் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனிடையே, தன் மனைவி, குழந்தைகளை அவ்வப்போது ஹரீஷ் பார்க்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய இணை, அவருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இருவருக்குமிடையே சண்டை முற்றியது. அதில் அவரை கத்தியால் சரமாரியாக அந்த இளம்பெண் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஹரீஷ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A woman in Gurugram stabbed her live-in partner as a days-long dispute allegedly over him meeting his wife and children continued to escalate. He died during treatment.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு... மேலும் பார்க்க

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணம... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மா... மேலும் பார்க்க

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி... மேலும் பார்க்க

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க