செய்திகள் :

மனை வாங்கும்போது `இந்த' இடத்தில் இருப்பதை வாங்குங்கள்; அதற்கு தான் மவுசு அதிகம்!

post image

மனை வாங்க பிளான் செய்துகொண்டிருக்கிறீர்களா மக்களே?

நேரில் செல்லுங்கள்

பொதுவாக மனை வாங்கும்போது, 'அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார்' என்றில்லாமல், நேரில் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும். அப்போது தான், நமக்கு ஏற்ற இடமா அது, பக்கத்தில் கடை, பள்ளிக்கூடங்கள், சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை போன்றவை இருக்கிறதா என்பதை நாமே செக் செய்ய முடியும்.

மனை
மனை

மண் பரிசோதனை

மனையைப் பார்க்கும்போது, அந்த இடத்தில் மழை தண்ணீர் தேங்குமா என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். முடிந்தால், மழைக்காலத்தில் நீங்கள் வாங்கப்போகும் நிலத்தைச் சென்று பாருங்கள்.

மனை வாங்குவதற்கு முன்பு, மண் பரிசோதனைச் செய்து பார்ப்பது நல்லது.

கார்னர் மனைகளுக்கு மவுசு

நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் கார்னர் மனைகளுக்கு எப்போது மவுசு அதிகம். முதலீடு நோக்கில் மனை வாங்குபவர்கள் இந்த மாதிரியான மனையை வாங்கலாம்.

புதிதாக லே அவுட் அமைக்கப்படும்போது, பெரும்பாலும் கார்னர் மனைகளுக்கு புரோமொட்டர்கள் கூடுதல் விலை வைத்து விற்கமாட்டார்கள். அந்த மாதிரியான சமயங்களில் கவனமாக குறைந்த விலைக்கு இந்த மனைகளை வாங்கிவிடலாம்.

அந்தப் பகுதி வளர்ச்சி அடையும்போது, கார்னர் மனைகளின் தேவையும் அதிகரிக்கும். அதன் விலையும் கூடும். அப்போது நாம் விற்கலாம்.

மனை
மனை

கடைகளுக்கு ஏற்றது

அதுப்போக, கார்னர் மனைகளில் நல்ல காற்றோட்டமும், சூரிய வெள்ளிச்சமும் இருக்கும்.

இந்த இடத்தில் கடைகள் வைத்தால், நன்றாக இருக்கும். அதனாலும், இந்த நிலத்தின் மவுசு கூடும்.

ஆனால், முட்டு சந்தில் அமைந்திருக்கும் மனை விலைப்போவது கடினம். அதனால், அந்த மனை வாங்கும்போது, கவனம் தேவை.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

நிலம், வீடு வாங்குகிறீர்களா? பத்திரப்பதிவில் செய்யக்கூடாத 13 தவறுகள்!

பார்த்து பார்த்து நிலம் அல்லது வீடு வாங்கிவிட்டு, அதை பதிவு செய்யும்போது, ஒரு சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். இது பின்னாளில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், இவற்றை பத்திரப்பதிவின் போதே, சரிசெய்வது மி... மேலும் பார்க்க

Real Estate: `என்ன கண்டிஷன்; எத்தனை ஆண்டுகள்?' - பழைய வீடு வாங்கலாமா, கூடாதா?

பழைய வீட்டை வாங்க போகிறீர்கள் என்றால் உங்கள் கண்முன்...1. பழைய வீட்டை வாங்கலாமா... அது பாதுகாப்பா?2. வாங்கினால், எந்தக் கண்டிஷனில் இருக்கும் வீட்டை வாங்கலாம்?3. எவ்வளவு ஆண்டுகள் ஆன வீட்டை வாங்கலாம்? ப... மேலும் பார்க்க