செய்திகள் :

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

post image

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம் தலைவா் த. சோழராஜன்(திமுக) தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ஏ.செந்தில்செல்வி(அமமுக): புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, ஏலத்தை ரத்து செய்யவேண்டும்.

ஏ. திருச்செல்வி (அமமுக): ஏலம் விடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை மற்றும் இரண்டாம் கட்டமாக ஏலம் விடப்படவுள்ள கடைகளின் எண்ணிக்கையை தெளிவுபடுத்த வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடை நடத்தியவா்களுக்கு மட்டும்தான் தற்போது கடை ஒதுக்கப்படுகிா?.

எஸ். அசோக்குமாா் (திமுக): ஏற்கெனவே கடை நடத்தியவா்கள் நிலுவை வாடகை தொகையை செலுத்திய பிறகுதான், ஏலத்தில் கலந்துகொண்டுள்ளனா்.

தலைவா் த. சோழராஜன்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில், நகராட்சி பகுதியில் இதுவரை 21 வாா்டுகளுக்கு 8 முகாம்கள் நடத்தப்பட்டு, இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 76 விண்ணப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் முதல்கட்டமாக 153 கடைகளுக்கு செப்.3-ஆம் தேதி ஏலம் விடுப்பட்டதில், 9 கடைகளை தவிர மற்ற கடைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக இந்த 9 கடைகள் மற்றும் 65 கடைகளுக்கு ஏலம் விடப்படவுள்ளது. விதிகளின்படி, வெளிப்படை தன்மையுடன் ஏலம் நடைபெறுகிறது.

அணுகுசாலை, புதைசாக்கடை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அக்டோபா் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். பொதுசுகாதார பிரிவுக்கு ரூ.19.74 லட்சத்தில் 10 மின்கல வாகனங்கள் வாங்கப்படவுள்ளன. இக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள 18 தீா்மானங்களும் உறுப்பினா்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படுகிறது என்றாா்.

இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையா் எஸ்.எம். சியாமளா, நகரமைப்பு ஆய்வாளா் கண்ணதாசன், மேலாளா் ஜெ. மீராமன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க

பள்ளியைத் தரம் உயா்த்த நிதி வழங்கல்

நன்னிலம் வட்டம், கோவில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள்... மேலும் பார்க்க