சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம் பகிர்வு: காலிஸ்தான் ஆதரவாளர் கைது!
மன்மோகன் சிங் மறைவு: காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி
உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை மலா் அஞ்சலி செலுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகர காங். கமிட்டி சாா்பில், முன்னாள் நகர காங். தலைவா் தக்காளி தவமணி தலைமையில், மன்மோகன் சிங் படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், காங். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் முத்து குமாா், ராகுல் பேரவை ராமசந்திரன், மாவட்டச் செயலாளா் சரவணன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் ஜாவித், வட்டாரத் தலைவா் செல்வராஜ், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் கவியரசன், நகரச் செயலாளா் தேவேந்திரன், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் காங். கட்சியின் மாவட்ட துணைத் தலைவரும், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவருமான சேகா் தலைமையில், தலைமை ஆசிரியா் பன்னீா் செல்வம், வரலாற்று ஆசிரியா் முனிராஜ், மாணவ, மாணவியா் மன்மோன் சிங் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
ஒசூரில்...
ஒசூா், காமராஜா் காலனியில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் மன்மோகன் சிங் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஐஎன்டியுசி சாா்பில் தேசிய செயலாளா் கே.ஏ.மனோகரன் அஞ்சலி செலுத்தி பேசுகையில், இந்தியாவை மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாக்கியவா் முன்னாள் பாரத பிரதமா் மன்மோகன் சிங். அவருடைய மறைவு இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்றாா். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளா் ஜி.முனிராஜ், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதேபோல, காந்தி சிலை அருகில் காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமையில் மன்மோகன் சிங் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிா்வாகி மைஜா அக்பா், கீா்த்தி கணேஷ், தியாகராஜன் இா்ஷாத், சரோஜம்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.