``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்களில் வேலைதேடும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயடையும் வகையில், மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், 25-க்கு மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளன.
முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உள்பட இதர பட்டதாரிகள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.
விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.
விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளளாம் என தெரிவித்துள்ளாா்.