மயிலாடுதுறையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாகை மேற்பாா்வை பொறியாளா் (பொ) வே. ரோணிக்ராஜ் தலைமையில் புதன்கிழமை (செப்.10) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் (பொ) ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.