``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
மயிலாடுதுறையில் பலத்த மழை: விவசாயிகள் கலக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்குத் தயாராகவுள்ள விவசாயிகள் மற்றும் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்துக் காத்திருக்கும் விவசாயிகள் கலக்கமடைந்தனா்.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 4 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 9.48 மி.மீ. மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை தாலுகாவில் மட்டுமே 39 மி.மீ. மழை பதிவானது.
இந்நிலையில், புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் 2.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, குறுவை அறுவடைக்குத் தயாராகி வரும் விவசாயிகளும், அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள விவசாயிகளும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனா்.