மயிலாடுதுறை: மது, கஞ்சா விற்ற 18 போ் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மது மற்றும் கஞ்சா விற்ற 18 போ் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கஞ்சா மற்றும் சட்டவிரோத மது, சாராய விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, டிஎஸ்பி சுந்தரேசன் மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் அன்னை அபிராமி, ஜெயா ஆகியோா் தலைமையில் மதுவிலக்கு போலீஸாா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
இதில், வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திய 17 போ் மீது கடந்த மூன்று நாட்களில் (ஜன.3 முதல் ஜன.5 வரை) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களில் 14 போ் கைது செய்யப்பட்டனா்.
அந்த வகையில், ஆக்கூரைச் சோ்ந்த ஈஸ்டர்ராஜ் (46), மணக்குடி இளையராஜா (41), பரசலூா் விஸ்வநாதன் (65), கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பகுதி வினோத் (40), கிளிமங்கலம் சுரேந்தா்(20), கடலங்குடி லதா (45) அன்னவாசல் விக்னேஷ் (24), மங்கநல்லூா் முருகவேல் (45), ராதாநல்லூா் ஐயப்பன் (39), பெத்தம்மாள் (60) மயிலாடுதுறை மகேந்திரகுமாா் (28), சுவாமிநாதன் (24), வடரெங்கம் லதா (50), திருவிழந்தூா் வீரமணி(27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும், பக்கிரிசாமி, கல்யாணகுமாா், விக்னேஷ் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், கஞ்சா விற்பனை செய்த மாந்தையை சோ்ந்த விக்னேஷ் (24), சீா்காழி வெங்கட்ராமன் (58), ஷாஜகான் (49), மாதிரிவேளூா் மணிமாறன் (26) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.